வாஷிங்டன்: உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது தொடர்பாக எந்த நாட்டுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை அவர் விவரித்தார். இதில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
“இந்த தருணத்துக்காக நாம் நெடுநாள் காத்திருந்தோம். ஏப்ரல் 2, 2025 அமெரிக்க தொழில்துறை மறுபிறவி எடுத்த நாளாக வரலாற்றில் அறியப்படும். அமெரிக்காவை மீண்டும் செல்வ செழிப்பு மிக்க நாடாக மாற்றும் நாளின் தொடக்கம் இது. அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது” என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.