இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘கடந்த 6 மற்றும் 7ம் தேதி இரவு இந்தியா நடத்திய எதிர்பாராத மோதலில் பொதுமக்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். 121 பேர் காயமடைந்தனர். தாய்நாட்டை பாதுகாக்கும் பணியில் ராணுவத்தின் ஆயுத படைகளைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 78 பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் விமான படையை சேர்ந்த ஸ்க்வாட்ரான் தலைவர், தலைமை தொழில்நுட்ப வல்லுநர், மூத்த தொழில்நுட்ப வல்லுநர், கார்போரல் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ராணுவ வீரர்கள் அடங்குவர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் மார்கா-இ ஹக் என்ற பதாகையின் கீழ் ஒரு உறுதியான பதிலடியை கொடுத்தன. ஆபரேஷன் பன்யானம் மார்சூஸ் மூலமாக துல்லியமான பழிவாங்கும் தாக்குதலை நடத்தின” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தாக்குதலில் பலியான பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டின் அதிபர், பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The post இந்தியாவுடனான மோதலில் 11 ராணுவ வீரர்கள் பலி, 78 பேர் காயம்: பாகிஸ்தான் அறிவிப்பு appeared first on Dinakaran.