இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஹனிப் அப்பாசி பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர், ‘‘சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால், அவர்களுக்கு போரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கோரி, ஷாஹீன், கஸ்னவி (ஏவுகணைகளின் பெயர்கள்) ஆகியவற்றை நாங்கள் வெறும் காட்சிக்கு வைத்திருக்கவில்லை. அவற்றை இந்தியாவுக்காகவே வைத்திருக்கிறோம். எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் உள்ளன. அவை ஒன்றும் காட்சிப் பொருட்கள் அல்ல. அவை பாகிஸ்தானில் எங்கிருக்கின்றன என்பது கூட உங்களுக்கு தெரியாது’’ என கூறி உள்ளார்.
ஏற்கனவே, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) பிலாவல் பூட்டோ சர்தாரி, ‘‘சிந்து நதியில் தண்ணீர் நிறுத்தப்பட்டால் இந்தியர்கள் ரத்தம் ஆறாக ஓடும்’’ என மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள்: பாக். அமைச்சர் மிரட்டல் appeared first on Dinakaran.