
புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா இடை யிலான வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவடையும் தருவாயில் இருப்பதாக மத்திய அரசின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது: இந்திய-அமெரிக்க பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவின் சந்தை அணுகல் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதோடு, இந்திய பொருட்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத வரி தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.

