மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் எல்லைகள் இல்லாத கலாச்சாரம் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய செர்ஜி, ‘‘ ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளும் முக்கிய பங்கு வகிக்க விரும்புகிறார்கள். ஆசியான் அமைப்பின் பங்கை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கின்றன. பல தசாப்தங்களாக அனைவருக்கும் பொருந்திய ஆசியான் நாடுகளின் மையப்பங்கை அவர்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு விரும்புகிறார்கள். ஒருமித்த கருத்துக்கான விதிகள், பொதுவான தளத்திற்கான தேடல் இவை அனைத்தையும் நமது மேற்கத்திய சகாக்கள் சிறிது சிறிதாக ஒதுக்கி தள்ளிவிட்டு சில ஏசியன் உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் வடிவங்களுக்கு பதிலாக வெளிப்படையாக மோதலுக்கு ஈர்ப்பதற்கு முயற்சிக்கின்றன. இந்தியாவையும், சீனாவையும் ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தி மோதலை உண்டாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்கின்றன” என்றார்.
The post இந்தியா-சீனா இடையே மோதலை உண்டாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி: ரஷ்யா பகீர் தகவல் appeared first on Dinakaran.