பெய்ஜிங்: இந்தியா- சீனா இடையே நிலையான உறவை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளின் வெளியுறவு துறை செயலர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி இரண்டு நாள் அரசு முறை பயணமாக கடந்த ஞாயிறன்று சீனா சென்றடைந்தார். இதனை தொடர்ந்து அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் வெய்டங்கை சந்தித்து நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளின் நிலையை இரு தரப்பினரும் விரிவாக மதிப்பாய்வு செய்தனர். கிழக்கு லடாக்கில் ராணுவ மோதல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கியிருந்த உறவுகளை உறுதிப்படுத்தவும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மக்களை மையமாக கொண்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இந்தியா-சீனா வெளியுறவு துறை செயலர்கள் பேச்சு appeared first on Dinakaran.