சென்னை: இலங்கை தமிழர் தொடர்ந்த வழக்கில் ‘இந்தியா தர்ம சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தமிழரான சுபாஷ்கரன் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல. இந்தியாவில் தொடர்ந்து தங்க உங்களுக்கு உரிமை இல்லை. இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்றால் வேறு நாட்டுக்கு சென்று புகலிடம் கோருங்கள்’ என்று தெரிவித்துள்ள கருத்து கவலைக்குரியது.