இந்தியா தாக்குவதை நிறுத்தினால் நாங்களும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசீப் கூறினார். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசீப் அளித்த பேட்டியில்,பாகிஸ்தான் தாக்கப்பட்டால் மட்டுமே பதிலடி கொடுக்கும் என்று கூறியதாக புளூம்பெர்க் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அவர் அளித்த பேட்டியில் கூறுகையில்,‘‘கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம் என்று கூறி வருகிறோம். ஆனால் நாங்கள் தாக்கப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம். தாக்குதலை நிறுத்தி இந்தியா பின்வாங்கினால், நிச்சயமாக பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்’’ என்று தெரிவித்தார்.
* நாடு முழுவதும் போர்க்கால பயிற்சி ஒத்திகை
பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பிறகு நேற்று மாலை 4 மணி முதல் சுமார் அரை மணி நேரம் நாடு முழுவதும் போர்க்கால பயிற்சி ஒத்திகை நடந்தது. டெல்லியில் மட்டும் 55 இடங்களில் இந்த பயிற்சி நடந்தது. நாடு முழுவதும் அணுமின் நிலையங்கள், ராணுவ தளங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர்மின் அணைகள் உள்பட சுமார் 300 மாவட்டங்களில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
* அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் ேமாடி வருவாரா?
பஹல்காம் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க ஏப்.24ல் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தானில் புகுந்து பதிலடி கொடுத்தது குறித்து விளக்கம் அளிக்க இன்று நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
The post இந்தியா தாக்குதலை நிறுத்தினால் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை: பாக்.ராணுவ அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.