புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகியோரை தொடர்பு கொண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பேசியுள்ளார்.
அவரிடம் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக பதில் தாக்குதலை இந்தியா கொடுக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்கா மட்டுமல்லாது கத்தார், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறையை தொடர்பு கொண்டு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.