ரியோ டி ஜெனிரோ: டிஜிட்டல் பொது கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவுகள் தொடர்பாக இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் வழங்கிய கூட்டு அறிக்கைக்கு ஜி20 உச்சிமாநாட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி20 அமைப்பில் உள்ள பல்வேறு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த அறிக்கையை அங்கீகரித்துள்ளன.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: உலகளாவிய வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளது. இது இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 4 சதவீதமாக இருந்தது. பெருந்தொற்றுக்குப் பின்னர் இது குறைந்தது. அதே நேரத்தில், தொழில்நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து வருகிறது. மேலும் சமமாக பயன்படுத்தப்பட்டால், வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்குமான ஒரு வாய்ப்பை வரலாறு நமக்கு வழங்குகிறது.