திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் குப்பத்தில் உள்ள பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் பன்னாட்டு ரோட்டரி சங்கம் சார்பில் மண்டல அளவில் ‘இந்தியா – 2030’ என்னும் தலைப்பில் நேர்படப் பேசு பேச்சுப் போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் திருவள்ளூர் பாரதிதாசன் நிறைநிலைப் பள்ளியில் இருந்து 9ம் வகுப்பு பயிலும் மாணவி அ.சா.சுமேதா ஜெனிலியா, 7ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீ.காவ்யா ஆகிய இருவரும் முதலிடம் பெற்று ஒவ்வொருவரும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற்று சாதனை படைத்தனர்.
மேலும் 8ம் வகுப்பு பயிலும் ப.ல.ஸ்ரீசாஸ்தா என்ற மாணவன் 3வது பரிசாக ரூ.4 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற்றார். இதனைத் தொடர்ந்து, பரிசு பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் மோ.தி.உமாசங்கர், கல்வி ஒருங்கிணைப்பாளர் நா.சுந்தர், பள்ளி முதல்வர் ஜோ.மேரி, தலைமை ஆசிரியர் குமரீஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
The post ‘இந்தியா – 2030’ பேச்சுப் போட்டி பாரதிதாசன் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.