புதுடெல்லி: இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வரும் செப்டம்பர் 4 முதல் 14 வரை உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி நடைபெறுகிறது. இந்த தொடருக்கான 20 பேர் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீராங்கனைகளான லோவ்லினா போர்கோஹெய்ன், நிகத் ஜரீன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவில்லை.
ஆடவர் அணி: ஜதுமணி சிங் மாண்டெங்பாம் (50 கிலோ), பவன் பர்ட்வால் (55 கிலோ), சச்சின் சிவாச் ஜூனியர் (60 கிலோ), அபினாஷ் ஜம்வால் (65 கிலோ), ஹிதேஷ் குலியா (70 கிலோ), சுமித் குண்டு (75 கிலோ), லக் ஷ்யா சாஹர் (80 கிலோ), ஜுக்னூ அஹ்லாவத் (85 கிலோ), ஹர்ஷ் சவுத்ரி (90 கிலோ), நரேந்தர் பெர்வால் (90+ கிலோ).