புதுடெல்லி: சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி மற்றும் பயிற்சியாளர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.58 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.