மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக்கை நியமனம் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது.
சிதான்ஷு கோடக் தற்போது இந்திய கிரிக்கெட் ஏ அணி தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது கோடக்கை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.