துபாய்: நாளை துபாயில் இந்தியா – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பெரிய எதிர்பார்ப்பை வளர்த்து வரும் நிலையில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப், “இங்கு இந்திய அணியை அடுத்தடுத்து தோற்கடித்துள்ளோம் என்பது நினைவிருக்கட்டும்” என்று எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் கடும் அழுத்தத்தில் இறங்குகிறது. ஏனெனில் முதல் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக தோல்வி கண்டதால் இந்திய அணியை வீழ்த்தியே ஆக வேண்டிய நெருக்கடி உள்ளது, இல்லாவிட்டாலும் இந்தியாவை வென்றாலே கோப்பையை வென்ற மகிழ்ச்சியடைவதுதான் அவர்கள் வழக்கம். எப்படி இருந்தாலும் கடும் பிரஷரில் பாகிஸ்தான் இறங்கும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க நியாயமில்லை.