
சிட்னி: இந்திய அணி உடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம். இதில் மேக்ஸ்வெல், டிம் டேவிட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்த தொடர் முடிந்ததும் இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

