சென்னை: நாட்டின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: இந்தியாவில் வகுப்புவாத சக்திகள் தலை தூக்காமல் இருக்க பரப்புரை மேற்கொண்டு இந்திய இறையாண்மையை பாதுகாப்போம். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.