ராமேசுவரம்: இந்திய – இலங்கை மீனவர்கள் குறித்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என ராமேசுவரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ரூபில்டன், டேனியல், சச்சின் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று படகுகளிலிருந்து 34 மீனவர்கள் மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்தனர். 34 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு பிப்ரவரி 5 வரையிலும் நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.