ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ரோஹித் சர்மா தலைமையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றிருந்த நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். திங்கள் கிழமை இரவு கேப்டன் ரோஹித் சர்மா மும்பை வந்து சேர்ந்தார். இதேபோன்று பயிற்சியாளர் கவுதம் கம்பீர், வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோர் டெல்லியை வந்தடைந்தனர். அணியில் பெரும்பாலான வீரர்கள் திங்கட்கிழமையே துபாயில் இருந்து புறப்பட்டுவிட்டனர்.