ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை கோங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கிப் பாராட்டினார்.
மலேசியாவில் சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் டி-20 இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டி சென்றது. முக்கியமான இப்போட்டியில் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் குவித்தது மட்டுமின்றி, 3 விக்கெட்களை சாய்த்த தெலங்கானாவை சேர்ந்த கோங்கடி திரிஷாவுக்கு ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.