ஜெய்ப்பூர்: இந்தியா தனது சந்தைகளை அமெரிக்காவுக்காக அதிகமாக திறக்க வேண்டும், அமெரிக்க எரிபொருட்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை அதிக அளவில் வாங்க வேண்டும் என்று என்று இந்தியா வந்துள்ள அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜே.டி. வான்ஸ், “இந்திய சந்தைகளை அமெரிக்கா அதிக அளவில் அணுக விரும்புகிறது. எரிபொருட்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் வாங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.