ஜம்முவில் உள்ள கோட் பலவால் சிறையிலிருந்து 1999ஆம் ஆண்டில், மசூத்தை தப்பிக்க வைக்க ஒரு சுரங்கப்பாதை கூட தோண்டப்பட்டது. ஆனால் மசூத் அசார் குண்டாக இருந்ததால் அதில் அவர் சிக்கிக்கொண்டார். மீண்டும் அவர் பிடிபட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 1999இல், தீவிரவாதிகள் ஒரு இந்திய விமானத்தைக் கடத்தி காந்தஹாருக்குக் கொண்டு சென்றனர். விமானத்தில் இருந்தவர்களை மீட்பதற்காக மூன்று தீவிரவாதிகளை விடுவிப்பதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அதில் ஒருவர், மசூத் அசார்.