“நம்பகமான தகவலின்படி, பாகிஸ்தானின் லாகூரில் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. மேலும், பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தியாவின் பல ராணுவ தளங்களை குறிவைக்க முயன்றதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியது. மறுபுறம், பாகிஸ்தானும் இந்தியா மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது