புதுடெல்லி: இந்தியப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா எப்போது குறைக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அதன் பலன்கள் நுகர்வோரைச் சென்றடைந்துள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர்.