புதுடெல்லி: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு, உலக நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார்.
அத்துடன் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்திருப்பதற்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் தனது வலைதளத்தில் கூறும்போது, “ரஷ்யாவுடன் சேர்ந்து இந்திய பொருளாதாரமும் செயலிழந்து விட்டது. அதை பற்றி எனக்கு கவலையில்லை” என்று கூறியிருந்தார்.