சென்னை: இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சென்னை ஐஐடியில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கவிழாவில் மத்திய கல்வி இணை அமைச்சர் சுகாந்தோ மஜும்தார் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை ஐஐடி-யில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான 2 நாள் தொழில்நுட்ப கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை மத்திய கல்வி இணை அமைச்சர் சுகாந்தோ மஜும்தார் தொடங்கிவைத்துப் பேசியதாவது: