இந்திய மக்களின் பிரதான செலவுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், கிராமப்புறங்களில் 7.6 சதவீதமும், நகர்ப்புறங்களில் 8.5 சதவீதமும் அன்றாட போக்குவரத்துக்கு செலவழிக்கின்றனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. தனிநபர் மாதாந்திர நுகர்வு செலவு (எம்பிசிஇ) எனப்படும் இந்த புள்ளி விவரம் குடும்பங்களின் பொருளாதார நிலையை கணக்கிடுவதற்கும், வறுமை விகிதங்களைக் கணக்கிடவும் முக்கிய அளவுகோலாக கருதப்படுகிறது.
முந்தைய ஆண்டில் கிராமப்புறங்களில் ரூ.3,773 ஆக இருந்த நுகர்வு செலவு, கடந்த ஆண்டு ரூ.4,122 ஆக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் ரூ.6,459-ல் இருந்து ரூ.6,996 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் மக்களின் போக்குவரத்து செலவுகள் உயர்ந்து வருவதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.