இந்திய விமானப் படையின் ரஃபேல் போர் விமானங்கள், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், விமானப்படைத் தளங்கள் மீது நடத்திய துல்லிய தாக்குதல்களால் பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்தின் பங்குகள் 66 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கி உள்ளது. இவை இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு ஹரியானாவின் அம்பாலா, மேற்குவங்கத்தின் ஹசிமாரா விமானப்படைத் தளங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன.