புதுடெல்லி: இந்தியாவின் இரும்புப் பெணமணி என்று அழைக்கப்படும் இந்திரா காந்தி 1917-ம் ஆண்டு நவம்பர் 19-ம்தேதி உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார்.
நேற்று அவரது 107-வது பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: தேச நலனுக்கான பாதையில் அச்சமின்றி நடைபோடுவதை எனது பாட்டியிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். தைரியத்துக்கும், அன்புக்கும் இன்றளவும் எடுத்துக்காட்டாக விளங்குபவர் அவர். அவரது வாழ்க்கையை பாடமாகக் கொண்டு கோடிக்கணக்கான இந்தியர்கள் தொடர்ந்து உத்வேகம் பெறுவார்கள். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்க அவர் தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார். அவரது பிறந்தநாளில் எங்களின் பணிவான மரியாதை.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.