சென்னை: 'இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பிப். 25ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது.
ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து பிப்ரவரி 25 அன்று, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு -தமிழ்நாடு (Federation of Students Organisation – Tamil Nadu) மற்றும் தி.மு.க. மாணவர் அணி சார்பில், பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக மாணவர் திமுக அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.