'இந்துத்துவா ஒரு நோய்' என்று குறிப்பிட்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்திக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இல்திஜா முப்தி கடந்த சனிக்கிழமை, 'ஜெய் ஸ்ரீராம்' என கூறுமாறு 3 முஸ்லிம் சிறுவர்கள் தாக்கப்படும் ஒரு வீடியோவுக்கு எதிர்வினையாற்றியிருந்தார்.