ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ரொமான்ஸ் த்ரில்லர் படம், ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வரும் 14-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அப்போது ஜெயம் ரவி கூறும்போது, “இந்தப் படத்தில் நித்யா மேனன் பெயருக்குப் பிறகு என் பெயர் இடம்பெறும். அது ஏன் என பலர் கேட்டார்கள். என் மீதான நம்பிக்கைத்தான். திரை வாழ்க்கையில் நிறைய விஷயங்களை உடைத்துள்ளேன். இது மட்டும் ஏன் கூடாது?