வாஷிங்கடன்: “ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம். அமைதிக்கான உடன்பாட்டை மேற்கொள்ளவில்லை எனில், ஈரான் மீது அடுத்தடுத்த தாக்குதல் மிகப் பெரியதாக இருக்கும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதை சமூக வலைதள பதிவு மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 (இந்திய நேரப்படி) மணி அளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.