சென்னை: இன்டெல் மணி நிறுவனம் தனது 6-வது பாதுகாக்கப்பட்ட, திரும்பப் பெறத்தக்க, மாற்ற இயலாத கடன் பத்திரங்களை அக்டோபர் 13-ம் தேதி வெளியிடுகிறது. அக்டோபர் 28 வரை இந்த திட்டம் இருக்கும்.
இதுகுறித்து இன்டெல் மணியின் செயல் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி உமேஷ் மேனன் கூறியதாவது: பிணையுறுதி பெற்ற மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (என்சிடி) ஒவ்வொன்றும் ரூ.1,000 முகமதிப்பு கொண்டதாக இருக்கும். இந்த வெளியீடு ரூ.150 கோடி வரை அடிப்படை வெளியீட்டு அளவை கொண்டது. ரூ.150 கோடி அதிகப்படியான சந்தாவைத் தக்கவைத்துக் கொள்ளும் விருப்பத்தையும் கொண்டுள்ளது. ஆக மொத்தம், ரூ.300 கோடி வரை இந்த வெளியீட்டின் மூலம் நிதி திரட்டப்படும்.