புதுடெல்லி: பிரபல தொழில்நுட்ப நிறுவனமான இன்போ எட்ஜ் தனது பணியாளர்கள் அனைவருக்கும் விஐபி சூட்கேஸ், ஸ்வீட் பாக்ஸ், விளக்கு அடங்கிய பரிசுத் தொகுப்பை தீபாவளி பரிசாக வழங்கியுள்ளது.
இதுகுறித்து பணியாளர்கள் வெளியிட்ட பதிவில், “அலுவலகத்துக்குள் நுழைந்தபோது ஒவ்வொரு பணியாளரின் மேசையிலும் கம்ப்யூட்டருக்கு பதிலாக அலங்கரித்து வைக்கப்பட்ட சூட்கேஸ், அதனுடன் சேர்த்து ஸ்வீட் பாக்ஸ் மற்றும் தீபமேற்றும் விளக்கு ஆகியவை தீபாவளி பரிசாக அடுக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒவ்வொரு பணியாளர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்துள்ளனர்.