சென்னை: சென்னை காவல், உதவி ஆணையாளர்கள் B..சகாதேவன் (புழல் சரகம்), A.இளங்கோவன் (திருவொற்றியூர் சரகம்), முதுநிலை நிர்வாக அதிகாரி G.சரோஜினி மார்தாள், காவல் ஆய்வாளர்கள் S.ராமு (H-3 தண்டையார்பேட்டை போ.கா.நி.,), J.ஞானசேல்வம், (W-26 அசோக்நகர் AWPS) என மொத்தம் 2 உதவி ஆணையாளர்கள், 1 முதுநிலை நிர்வாக அதிகாரி, 2 காவல் ஆய்வாளர்கள், 19 காவல் உதவி ஆய்வாளர்கள், 11 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1 தலைமைக் காவலர் என மொத்தம் 36 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 31.03.2025 அன்று பணி ஓய்வு பெறுகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இன்று வேப்பேரி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து 31.03.2025 அன்று ஓய்வு பெறுகின்ற 36 காவல் துறையினர் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பணி ஓய்வுபெறுகின்ற திருவொற்றியூர் சரக காவல் உதவி ஆணையாளர் A.இளங்கோவன் கடந்த 2017ம் ஆண்டு K-7 ஐ.சி.எப். காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணி செய்த போது தாக்கலான கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி தொடர்ச்சியாக சிறப்பு கவனம் செலுத்தி, சாட்சிகளை ஆஜர்படுத்தியும், சென்னை, 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிமன்ற விசாரணை முடித்து இவ்வழக்கின் 3 எதிரிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2000/- அபராதம் விதித்து கனம் நீதிபதி அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இவ்விழாவில் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
காவல் ஆணையாளர், ஓய்வு பெறுகின்ற காவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்தும், பணி ஓய்வு பெறுகின்ற காவல் அதிகாரிகள், அலுவலர்கள் தங்களது உடல் நலத்தையும், குடும்பத்தையும் பேணி காக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிடம் கபில் குமார் சி.சரட்கர், துணை ஆணையாளர் தலைமையிடம் D.N.ஹரிகிரண் பிரசாத், மற்றும் காவல் அதிகாரிகள், ஓய்வு பெறுகின்ற காவல் அலுவலர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
The post இன்று பணி ஓய்வு பெறுகின்ற 36 காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார் காவல் ஆணையாளர் appeared first on Dinakaran.