சென்னை: தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று மாலை அரசு தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்பட்டது.
எனவே, திங்கட்கிழமை (இன்று) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில், திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்’ என தெரிவித்துள்ளார்.