சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் அதிமுக- பாஜ கூட்டணி முறிந்த நிலையிலும் பாஜவுடன் கை கோர்த்து செயல்பட்டார். மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட வேண்டும்; பாஜ தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழ்னிசாமியோ, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கவே மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் அமித்ஷா-எடப்பாடி சந்திப்பை அடுத்து கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது, ஒபிஎஸ் நேற்று ஒரே நாளில் திருவேற்காடு, பாடி, திருவொற்றியூரில் உள்ள கோயில்களுக்கு சென்று தன்னுடைய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற பூஜை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post இபிஎஸ் டெல்லிக்கு சென்ற நிலையில் கோயிலில் வழிபாடு நடத்தினார் ஒபிஎஸ் appeared first on Dinakaran.