சென்னை: "தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது" என்று அதிமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தமிழக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார். டாஸ்மாக் மதுபான முறைகேட்டில் ரூ. 1 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.