திண்டுக்கல்: “தேசிய ஜனநாயக ஆட்சி இபிஎஸ் தலைமையில் நடைபெறும். இந்த முறை சட்டமன்றத்துக்கு பாஜகவைச் சேர்ந்த அதிக எம்எல்ஏ-க்கள் செல்வார்கள். ” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் உள்ள புனிதவியாகுல அன்னை ஆலயத்தில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பங்குத்தந்தை செல்வராஜை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில், பாஜ கட்சியின் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப்பெருமாள் தலைமை வகித்தார். திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் முத்து ராமலிங்கம் வரவேற்றார்.