சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி திரு.வி.க.நகர் எம்எல்ஏ தாயகம் கவி(திமுக) பேசுகையில் “முதல்வர் 110 விதியின் அறிவிப்பில் 708 நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதில் எத்தனை செயல்பாட்டில் வந்துள்ளது’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்” 2022 மே மாதம் 7ம் தேதி தமிழகத்தில் 708 நகர்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என 110 விதியில் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார். ஓராண்டில் அதில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன.
எஞ்சிய 208 நகர்புற நலவாழ்வு மையங்களுக்கான கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அந்த மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் மாவட்ட மருத்துவக் குழு மூலமாக ஆட்சியர்கள் வாயிலாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இம்மாத இறுதியில் தமிழகத்தில் எஞ்சிய 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களும் திறக்கப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
The post இம்மாத இறுதியில் தமிழகத்தில் எஞ்சிய 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களும் திறக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.