இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் இம்ரானின் மனைவி புஷ்ரா பீபியின் முன்ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த நவம்பர் 26ம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இதில் சுமார் 1400க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டம் தொடர்பான மூன்று வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கக் கோரி முன்னாள் பிரதமர் இம்ரானின் மனைவி புஷ்ரா பீபி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கூடுதல் செசன்ஸ் நீதிபதி முகமது அப்சல் மஜோகா இந்த மனுக்களை விசாரித்தார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றம் கூறியபடி பிணை பத்திரங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறி ஜாமீன் மனுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதியும், பிணை பத்திரங்களை நீங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை.என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post இம்ரான் மனைவியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.