‘அசுரன்' 'வாத்தி' 'விடுதலை 2' ஆகிய படங்களில் நடித்த கென் கருணாஸ், புதிய படத்தின் கதையின் நாயகனாக நடித்து இயக்குநர் ஆகிறார். இந்தப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி ராம் தயாரித்துள்ளார். பள்ளி பின்னணியின் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதன் அறிமுக டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் தயாரிப்பாளர் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘சண்முகம் சலூன்’ என்ற குறும்படத்தை இயக்கியவர்.