புதுடெல்லி: கடந்த ஆண்டு இயற்கை பேரிடரைச் சந்தித்த தமிழகத்துக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.522.34 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்ட பிஹார், ஹிமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுடன் தோளோடு தோள் நிற்கிறது. மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு 2024-ஆம் ஆண்டில் திடீர் வெள்ளம், பலத்த மழை, நிலச்சரிவுகள், சூறாவளி புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பிஹார், ஹிமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1280.35 கோடி கூடுதல் நிதி உதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.