வாஷிங்டன்: இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்க நாடாளுமன்றமான ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தொடரில் ட்ரம்ப் முதல் உரையாற்றினார். அமெரிக்காவின் புதிய அதிபராக மீண்டும் பதவியேற்ற அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிபர் டிரம்ப் புதிய வரி விதிப்புக்கள் மூலமாக பேரழிவு தரும் புதிய வர்த்தக போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும், உள்நாட்டு விவகாரங்கள் குறித்தும் டிரம்ப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பேசியதாவது, அமெரிக்கா திரும்ப வந்துவிட்டது. அமெரிக்காவில் பொற்காலம் தொடங்கிவிட்டது என முதல் உரையை பேச தொடங்கினார்.
பெரிய கனவுகள் மற்றும் தைரியமான செயல்களுக்கான நேரமிது என்றும், ஒவ்வொரு நாளும் எனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்கிறேன் என குறிப்பிட்டார். மேலும், வரலாற்று இதுவரை காணாத அளவுக்கு இந்த தேர்தல் நடந்துள்ளது. ஜனநாயகத்தை மீண்டும் மீட்டெடுத்துள்ளோம். மெக்சிகோவுக்கும், கனடாவுக்கு பில்லியன் டாலர்களை மானியமாக கொடுக்கிறோம். இனி அது நிறுத்தப்படும். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்களை வாங்கினால், வாகனக் கடன் வரி குறைப்பு. உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு வரியை குறைக்க விரும்புகிறோம். சட்ட விரோதமாக எல்லை தாண்டி வரும் நிகழ்வுகள், கடந்த ஒருமாதத்தில் வெகுவாக குறைந்துள்ளன என தெரிவித்தார்.
ட்ரம்ப் உரை -எதிர்க்கட்சி எம்.பி. வெளியேற்றம்
அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தில் ட்ரம்ப் முதல் உரை ஆற்றிய நிலையில், எதிர்க்கருத்து தெரிவித்த ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் வெளியேற்றம் செய்யப்பட்டனர். ட்ரம்ப் பேசும் போது, “உங்களுக்கு அதிகாரம் இல்லை” என உரத்த குரல் எழுப்பிய க்ரீனை, இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். எனினும், தொடர்ந்து க்ரீன் தனது கருத்தைக் கூறவே, உடனே பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து அவரை வெளியே கூட்டிச் செல்ல உத்தரவிடப்பட்டது.
The post இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதல் உரை appeared first on Dinakaran.