மஹ்சா அமினி போலீஸ் காவலில் இறந்ததைத் தொடர்ந்து இரானில் போராட்டங்கள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. இரானிய அரசாங்கம் நெருக்கடி முடிந்துவிட்டதாகக் காட்ட விரும்புகிறது, ஆனால் கட்டாய ஹிஜாப் சட்டம் மற்றும் பல பெண்கள் அதை நிராகரிப்பது அதிகாரிகளுக்கு பெரிய பிரச்னையாக உள்ளது.