சென்னை: இருமொழி கொள்கையை காப்பாற்றும் திறனற்றதாக திமுக அரசு உள்ளது என விமர்சித்துள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அதிமுக ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதிமுக நாளை கொண்டாட உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த வேளையில், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், எல்லா நேரத்திலும் தாயாகவும், சகோதரியாகவும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் இமயம்போல் உயர்ந்தும் விளங்கிய அவரை, ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும், நகர்விலும் தமிழ் நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்கின்றார்கள்.