திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு. மெட்ராஸ் உருவாவதற்கு முன்பே உருவான வரலாற்று சிறப்பு மிக்க இங்குள்ள ஏரி, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில், 481 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
ஒடிசாவில் உள்ள சிலிகா ஏரியை அடுத்து, இந்தியாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரியாக விளங்கும் பழவேற்காடு ஏரியின் குறுக்கே உள்ளது பழவேற்காடு – லைட் ஹவுஸ்குப்பம் உயர் மட்ட பாலம். பழவேற்காடு பகுதியில் வசிக்கும் மீனவ மக்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக சுமார் ஒரு கி.மீ. நீளத்துக்கு கடந்த 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இப்பாலத்தின் இருபுறமும் சுமார் 15 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.