புதுடெல்லி: இறக்குமதி வரி குறைப்புக்குப்பின் இந்தியாவில் டெஸ்லா காரின் விலை ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டெஸ்லா கார், இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும், பெரும்பாலான மக்களை சென்றடைய வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்திய பிரதமர் மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின்போது, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் கூறினார். இதனால் அமெரிக்க பொருட்களை இந்தியாவில் விற்கமுடியவில்லை என அவர் தெரிவித்தார். டெஸ்லா கார் நிறுவனர் எலான் மஸ்க்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேசி இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தியை தொடங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இறக்குமதி வரியையும் 20 சதவீதத்துக்கு கீழ் இந்தியா குறைக்கும் எனத் தெரிகிறது. .