‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சர்தார் 2’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் மைசூர் படப்பிடிப்பின்போது கார்த்தி-க்கு காலில் அடிபட்டதால், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது அந்த படப்பிடிப்பை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் கார்த்தி.